நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிவசேனை எம்.பி.யின் ஓட்டுநருக்கு பரிசாக ரூ. 150 கோடி நிலம்!

மகாராஷ்டிரத்தில் எம்.பி.யிடம் ஓட்டுநராகப் பணிபுரிபவருக்கு அரச குடும்பத்தினர் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கினர்.

News image

சிவசேனை எம்.பி. சந்திபன் பூம்ரே - கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2025, 10:35 am IST

மகாராஷ்டிரத்தில் சிவசேனை எம்.பி.யிடம் ஓட்டுநராகப் பணிபுரிபவருக்கு அரச குடும்பத்தினர் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கினர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சத்ரபதி சம்பாஜி நகரில் ஹைதராபாத் அரச குடும்பத்தின் சந்ததியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நிஜாம் சகாப்தத்தில் பிரதமராக இருந்தவர்களின் சந்ததியினரான மீர் மஹ்மூத் அலி மஜார் அலிகான் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து, ஓட்டுநர் ஒருவருக்கு ரூ. 150 கோடி மதிப்புடைய நிலத்தை பரிசாக வழங்கியுள்ளனர்.

சிவசேனை எம்.பி. சந்திபன் பூம்ரே மற்றும் அவரது மகனும் எம்.எல்.ஏ.வுமான விலாஸ் பூம்ரே ஆகிய இருவரிடமும் 13 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணிபுரியும் ஜாவேத் ரசூல் ஷேக் என்பவருக்கு 3 ஏக்கர் நிலத்தை ஹிபனாமா (பரிசு பத்திரம்) மூலம் பரிசாக வழங்கியுள்ளனர்.

இந்த பரிசு வழங்கப்பட்ட நிகழ்வு குறித்து எம்.பி. சந்திபனிடம் கூறுகையில், இது ரசூலின் தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்தார்.

ஆனால், பரிசாக வழங்கப்பட்ட நிலத்தின் மீது நீண்டகாலமாக சட்டப் போர் நீடித்து வந்த நிலையில், 2022-ல் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கிடைத்த நிலத்தை பரிசாக வழங்கியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனையடுத்து, அலிகான் குடும்பத்தினருடன் ரசூலுக்கு நீண்டகாலமாகவே நெருங்கிய பழக்கம் இருந்ததால்தான், பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இருப்பினும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஹிபனாமா என்பது பொதுவாக ரத்த சொந்தங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், ரசூலும் அரச குடும்பத்தினரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.