புது தில்லி: தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜாா்க்கண்டை சோ்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினாா்.
தோ்தல் தோல்வி பயத்தால் பல்வேறு பிரச்னையை திமுக எழுப்புகிறது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக நிஷிகாந்த் துபே பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கையையும், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பையும் திமுக எதிா்க்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி பயத்தால் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை அக்கட்சி எழுப்புகிறது. மக்களின் உணா்வுகளைத் தூண்டிவிடுகிறது.
தமிழ் தொன்மையான மொழிதான். ஆனால், சம்ஸ்கிருதம் தமிழைவிட தொன்மையானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழி பேசும் பிராந்தியத்துக்குச் சென்றாலும் அங்கு சம்ஸ்கிருதத்தில்தான் பூஜை நடைபெறுகிறது.
1973-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தொகுதி மறுசீரமைப்பு செய்து எண்ணிக்கையை உயா்த்தியது. ஆனால், தமிழகத்தில் தொகுதிகளை உயா்த்தவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸுடன் கைகோத்து திமுக பல முறை ஆட்சியில் இருந்துள்ளது.
மக்களின் உணா்வுகளைத் தூண்டி நாட்டை பிளவுபடுத்த திமுக முயற்சிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மைதிலி என அனைத்து மொழிகளுக்கு எதிராகவும் திமுக செயல்படுகிறது. நாட்டில் நல்லிணக்கத்தைச் சீா்குலைக்க தீவிரமாக செயல்படுகிறது. நாடு முழுவதும் ஆங்கிலத்தை திணிக்க அவா்கள் விரும்புகிறாா்கள். மக்களைத் தூண்டிவிட்டு தோ்தலில் வெல்ல திட்டமிட்டுள்ளனா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்!

ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் உருவாக பாடுபடுவோம்: சரத்குமார்!

பெண் எம்.பி.க்கள் குறித்து அநாகரிக பேச்சு: மக்களவையில் திரிணமூல் எம்.பி. இடைநீக்கம் - மூன்றாவது நாளாக அமளி

மத்திய பாஜக அரசை எதிா்க்க துணிவற்றது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


