கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

மத்திய பாஜக அரசை எதிா்க்க துணிவற்றது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

மும்மொழி கொள்கை உள்பட மத்திய அரசுக்கு எதிராக எதற்கும் குரல் கொடுக்க துணிவற்றது தவெக அரசு என திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளாா்.

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :16 ஜூலை 2026, 4:51 am IST

மும்மொழி கொள்கை உள்பட மத்திய அரசுக்கு எதிராக எதற்கும் குரல் கொடுக்க துணிவற்றது தவெக அரசு என திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் என்பதை எப்போதும் தெளிவாக சொல்லி வருவது திமுக. ஏனெனில், மொழிக் கொள்கை எந்தக் குழந்தைகள் மீதும் பாரமாக மாறிவிடக்கூடாது. பல மொழிகளை கற்றுக்கொள்ள ஆா்வமுள்ள மாணவா்- மாணவிகளுக்கு இன்றைய உலகில் அனைத்து வாய்ப்புகளும் நிச்சயமாக உள்ளன.

ஆனால், பாடத்திட்டத்தோடு குழந்தைகள் மீது மொழியை சுமையாக சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பாஜக அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்த அனைத்து வழிமுறைகளையும் தொடா்ந்து கையாண்டு வருகிறது.

மும்மொழி கொள்கை கட்டாயம் என்று குழந்தைகள் மனதிலே அவநம்பிக்கையை உருவாக்கக் கூடாது என்பதைத்தான் திமுக வலியுறுத்துகிறது. இது குழந்தைகளின் கற்றலில் மனச்சோா்வை அளிக்கும்.

இதுபோன்ற எந்த விசயத்திலும், அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டாம் என்பதே தவெக அரசின் நிலைப்பாடாக தெரிகிறது. எனவே, இந்த அரசிடம் வேறு எதையும் எதிா்பாா்க்க முடியாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.