கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

கேதர்நாத் யாத்திரை குறித்து...
கேதர்நாத்
கேதர்நாத்
Published on
Updated on
1 min read

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ ஆஷா நௌதியல் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் கவனிக்கப்படாத சில பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கேதர்நாத் கோவில் குறித்து மக்கள் எழுப்பிய பிரச்சினைகளுடன் உடன்படுவதாகத் தெரிவித்த நௌதியல், கேதார்நாத் கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலர் நடந்துகொள்வதாகவும், அவர்கள் கேதர்நாத் வளாகத்திற்குள் நுழையத் தடை விதிக்கக் கோரிக்கை வைக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், இவ்வாறு செய்பவர்கள் கோவிலில் அவதூறான காரியங்களை செய்ய வரும் ’இந்துக்கள் அல்லாதவர்கள்’ என்று நௌதியல் குற்றச்சாட்டு வைத்தார்.

முன்னதாக, உத்தரகாண்ட் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கேதர்நாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப்பில் உள்ள இரண்டு ரோப்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது தொடர்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தத் திட்டங்கள் நிறைவடைந்தவுடன், இரண்டு புனித யாத்திரைத் தலங்களுக்கும் வருபவர்களுக்கு விரைவான, சிறப்பான அனுபவம் கிடைக்கும்.

அதில், கேதார்நாத்தில் உள்ள சோன்பிரயாக் 12.9 கிமீ ரோப்வே திட்டமாகும். இது வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்குதல் மற்றும் பரிமாற்றம் முறையில் உருவாக்கப்படவுள்ளது. இதன் மொத்தச் செலவு ரூ.4,081.28 கோடி.

இந்த ரோப்வே பொது-தனியார் கூட்டாண்மையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் 1,800 பயணிகளையும், ஒரு நாளைக்கு 18,000 பயணிகளையும் ஏற்றிச் செல்ல முடியும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com