முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

முதல்வருடன் பிரேம்சந்த் அகர்வால்.

Updated On :

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.

உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் போராட்டங்களும் அரங்கேறின.

பின்னர் அமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். முதல்வர் புஷ்கர் சிங் தாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை பிரேம்சந்த் வழங்கினார்.

பதவி விலகும்போது, எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரேம்சந்த் கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மாநில முன்னேற்றத்திற்காக உதவுவதற்கு நான் எந்த வகையிலும் பங்களிக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.