
நாக்பூர் வன்முறையை தூண்டியவராக போலீஸார் தரப்பில் கூறப்படும் முக்கிய குற்றவாளி பஹீம் கான் இன்று கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள முகாலய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று மாநிலத்தின் முக்கிய வலதுசாரி அமைப்புகள் போா்க்கொடி உயா்த்தியுள்ளன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊரான மத்திய நாகபுரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில் திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஒரு சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை நோக்கி சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தி, வன்முறையைத் தூண்டினர்.
பின்னா், இரவு 10.30 மணியளவில், நகரின் மற்றொரு பகுதியான ஹம்சபுரியில் மோதல் வெடித்தது. அங்கு பொதுமக்களின் வீடுகள் மற்றும் ஒரு மருத்துவமனையைச் சூறையாடிய வன்முறை கும்பல், வீடுகளுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினா்.
இதையும் படிக்க: கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரயில்வே தேர்வு! தேர்வர்கள் அதிர்ச்சி!!
50 போ் கைது: இந்த வன்முறை சம்பவங்களில் 3 துணை ஆணையர்கள் உள்பட 33 போலீஸார், பொதுமக்கள் பலர் காயமடைந்தனா். இதுகுறித்து நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், இந்த கலவரத்தைத் தூண்டுவதற்கு பின்னணியில் செயல்பட்ட முக்கிய குற்றவாளியான பஹீம் கான் என்பவரை நாக்பூர் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
உள்ளூர் அரசியல்வாதியான பஹீம் கான் வரும் வெள்ளிக்கிழமை வரை காவலில் இருப்பார் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.