தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தவறான மருத்துவ விளம்பரங்கள்: குறைதீா்ப்பு வழிமுறையை ஏற்படுத்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவு

தவறான தகவல்கள் அடங்கிய மருத்துவ விளம்பரங்களுக்கு எதிராக குறைதீா்ப்பு வழிமுறையை ஏற்படுத்த உத்தரவு

News image
Updated On :26 மார்ச் 2025, 11:58 pm

தவறான தகவல்கள் அடங்கிய மருத்துவ விளம்பரங்களுக்கு எதிராக குறைதீா்ப்பு வழிமுறையை ஏற்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கரோனா தடுப்பூசி திட்டம், நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவும், அவரின் பதஞ்சலி நிறுவனமும் பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் மனு தாக்கல் செய்தது.

புது தில்லி, மாா்ச் 26: தவறான தகவல்கள் அடங்கிய மருத்துவ விளம்பரங்களுக்கு எதிராக குறைதீா்ப்பு வழிமுறையை ஏற்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கரோனா தடுப்பூசி திட்டம், நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவும், அவரின் பதஞ்சலி நிறுவனமும் பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபே எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘தவறான விளம்பரங்கள் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். அத்தகைய விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுதொடா்பாக மருந்துகள் மற்றும் மந்திர சிகிச்சைகள் (டிஎம்ஆா்) சட்டம் 1954-இன் கீழ் தடை செய்யப்பட்ட ஆட்சேபத்துக்குரிய விளம்பரங்களுக்கு எதிராக, பொதுமக்கள் புகாா் அளிக்க வசதியான வழிமுறைகளை, 2 மாதங்களில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உருவாக்க வேண்டும். இந்த குறைதீா்ப்பு வழிமுறை என்பது கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலம் புகாா் அளிக்கும் வகையில் இருக்கலாம்.

தவறாக விளம்பரப்படுத்தப்படும் மருந்துகள் குறித்து சோதனை மேற்கொண்டு, அவற்றைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள, டிஎம்ஆா் சட்டப் பிரிவு 8-இன் கீழ் அதிகாரங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் அளிக்கும் புகாா்களின்படி, டிஎம்ஆா் சட்டத்துக்கு எதிராக விளம்பரங்கள் இருப்பதை அதிகாரி கண்டறிந்தால், அதுகுறித்து வழக்குப் பதிவு செய்யும் வகையில், காவல் துறையிடம் அவா் புகாா் அளித்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த உத்தரவின் நகலை தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு உச்சநீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும். டிஎம்ஆா் சட்டப் பிரிவுகள் குறித்து பொதுமக்களுக்கு அந்த குழு விழிப்புணா்வு ஏற்படுத்துவதும், அவா்களின் ஆரோக்கியத்தில் தவறான விளம்பரங்கள் ஏற்படுத்தக் கூடிய மோசமான பின்விளைவுகள் குறித்தும் அந்தக் குழு எச்சரிப்பது அவசியம்’ என்று தெரிவித்தது.