மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடி வசூலித்த தனியார் பயிற்சி மையம்: அமலாக்கத் துறை!

மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடி வசூலித்து தனியார் பயிற்சி மையம் ஏமாற்றியதாக அமலாக்கத் துறை புகார்
தனியார் பயிற்சி மையம்
தனியார் பயிற்சி மையம்
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் தனியார் பயிற்சி மையத்தின் அலுவலகங்களில் இரண்டு நாள்கள் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி 14,000 மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடியை பெற்று மோசடி செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த தனியார் பயிற்சி நிறுவனமானது, மிக மோசமான பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பல்வேறு மையங்களிலும் 14,411 மாணவர்களிடமிருந்து ரூ.250,2 கோடியை வசூலித்திருப்பதாகவும், 2025 - 26 முதல் 2028 - 29ஆம் ஆண்டு வரை பயிற்சி அளிப்பதாகவும் பெற்றோருக்கு உறுதி அளித்திருக்கிறது.

பயிற்சி வழங்குவதாகக் கூறி பணத்தை மட்டும் வசூலித்துவிட்டு முறையாக பயிற்சி வழங்கவில்லை. பெற்றோரிடமிருந்த பெற்ற பணத்தை வேறு செலவினங்களுக்கு செலவிட்டுவிட்டு, பயிற்சியாளர்களுக்கு பல மாத ஊதியம் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதகாவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் 32 பயிற்சி மையங்கள் மூடப்பட்டு, பணம் கட்டிய பெற்றோரும் மாணவர்களும் நிற்கதியாக விடப்பட்டுள்ளனர்.

பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மூலம், இந்த நிறுவனம் பெற்றோரிடமிருந்த வசூலிக்கும் தொகை பயிற்சி நிறுவனங்களை நடத்துவதற்காக செலவிடாமல் இருந்துள்ளது அப்பட்டமாகத் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர் டி.கே. கோயல், நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 24ஆம் தேதி அமலாக்கத் துறை தீவிர சோதனை நடத்தியிருந்தது. இதில் ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரூ.4.98 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com