/

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழைய தடை.

News image

கோப்புப் படம் - IANS

Updated On :3 மே 2025, 1:45 pm IST

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதேபோல இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவின் சொத்துகள், சரக்குகள் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வணிகக் கப்பல் சட்டம், 1958-ன் பிரிவு 411-ன் கீழ் உடனடியாக இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

கடற்படையின் மூலமாக இந்திய வணிகத்தை ஊக்குவிப்பதும், கடற்படையின் பராமரிப்பை உறுதி செய்வதும் இந்தச் சட்டத்தின் நோக்கம்" என்று அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து அனைத்துப் பொருள்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ள மத்திய அரசு, இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.