நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!

நாடு முழுவதும் விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்தியா முழுவதும் சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளின் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதனால், நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அகாஸா ஏர் உள்ளிட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு இயக்கி வந்த விமானப் போக்குவரத்தை தற்போது ரத்து செய்துள்ளன. இதில், சுமார் 300 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜம்மு, ஸ்ரீநகர், லேஹ், அமிர்தசரஸ், பதான்கோட், சண்டிகர், ஜோத்பூர், ஜெய்சால்மர், சிம்லா, தர்மஷாலா, ஜாம்நகர் உள்ளிட்ட இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலுள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக தங்களது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.

வான்வழித் தடங்கள் மீதான கட்டுப்பாடுகளினால் இண்டிகோ நிறுவனம் சுமார் 165 விமானங்களை மே.10 ஆம் தேதி காலை வரை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது. இதேபோல், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 140 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்தோர் கூடுதல் கட்டணமின்றி அதனை மற்ற தேதிகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும், அவர்கள் விரும்பினால் ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கான பணம் திருப்பியளிக்கப்படும் எனவும் அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதையும் படிக்க: பாகிஸ்தான் தாக்குதலில் 15 பேர் பலி: 43 பேர் காயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com