இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

இந்தியா - பாக். போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் - துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல்AP
Updated on
1 min read

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் நேற்றிரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இரு நாட்டு ராணுவமும் எல்லைப் பகுதிகளில் தீவிரமாகச் சண்டையிட்டு வருகின்றன.

இது குறித்து அமெரிக்காவில் செய்தியாளர்களுடன் அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) பேசியதாவது: “இந்த இரு நட்பு நாடுகளும் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா ஊக்குவிக்கிறது, ஆதரவளிக்கிறது. இதைத்தான் எங்களால் செய்ய முடியுமே தவிர, போருக்கிடையில் நாங்கள் தலையிடப் போவதில்லை.

அதனை தேவையில்லாத செயலாகவே அமெரிக்கா கருதுகிறது. அதுமட்டுமில்லாது, இந்த சண்டையை கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்காவிடம் இல்லை” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com