திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து

இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Updated On :10 மே 2025, 3:57 pm IST

இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய திட்டமிட்ருந்தார். திட்டத்தின் படி, குடியரசுத் தலைவர் முர்மு கேரள மாநிலம், நிலக்கல் ஹெலிபேடில் தரையிறங்கி, பின்னர் பம்பாவிலிருந்து சபரிமலைக்கு மலையேற்றப் பாதையில் ஏற இருந்தார்.

இதையொட்டி முர்முவின் பயன்பாட்டிற்காக சன்னிதானத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் இரண்டு அறைகளை திருவிதாங்கூர் தேவசம் வாரியம் புதுப்பித்திருந்தது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பொது தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதால் இந்த நாள்களில் பக்தர்களின் பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி வங்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.