விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நாடு முழுவதும் 103 பாரத் அம்ரித் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 103 ரயில் நிலையங்கள் திறப்பு..

News image

அம்ரித் ரயில் நிலையங்களை திறந்துவைத்தார் பிரதமர் மோடி - -

Updated On :22 மே 2025, 12:43 pm IST

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 103 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயில் 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் பணிகள் நிறைவடைந்த நிலையில், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'அம்ரித் நிலையங்களை' பிரதமர் திறந்துவைத்தார்.

தமிழகத்தில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.

ஜார்க்கண்டில் மறுசீரமைக்கப்பட்ட மூன்று ரயில் நிலையங்களைப் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். குந்தி மாவட்டத்தில் உள்ள கோவிந்த்பூர் சாலை ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் மாநில நிலம் மற்றும் வருவாய் அமைச்சர் தீபக் பிருவா, முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, டோர்பா உறுப்பினர் சுதிவ்யா குடியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்கத்தில் கல்யானி கோஷ்பரா ரயில் நிலையம், பங்கர் ரயில் நிலையம், ஜாய்சண்டி பஹார் ரயில் நிலையம் உள்பட புதுப்பிக்கப்பட்ட மூன்று ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரசேதத்தில் மாஹே அம்ரித் பாரத் ரயில் நிலையமும் திறக்கப்பட்டது.

அசாம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அம்ரித் ரயில் நிலையங்களை பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்துவைத்தார்.

மறுசீரமைக்கப்பட்ட அம்ரித் ரயில் நிலையங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள்..

புதிதாக மறுசீரமைக்கப்பட்ட அம்ரித் ரயில் நிலையங்களில் சிட்டி சென்டர் போன்று ரூப் பிளாஸா, புட் கோர்ட், சிறுவர் விளையாட்டுப் பகுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் தனித்தனி உள் நுழையும் மற்றும் வெளியேறும் வாசல்கள், மின்தூக்கி, காத்திருப்புப் பகுதி, மாற்றுத் திறனாளிகளுக்கேற்ப வசதிகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.