பெங்களூரு விமான நிலையம் (கோப்புப்படம்)
பெங்களூரு விமான நிலையம் (கோப்புப்படம்) ANI

கன்னட மொழிப் பிரச்னை.. அலுவலகத்தை புணேவுக்கு மாற்றுகிறேன்: தொழிலதிபர் பதிவு

கன்னட மொழிப் பிரச்னையால் பெங்களூரில் உள்ள அலுவலகத்தை புணேவுக்கு மாற்றுகிறேன் என தொழிலதிபர் பதிவு
Published on

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் கௌஷிக் முகர்ஜி, தான் இந்த மொழிப் பிரச்னையில் சிக்க விரும்பவில்லை என்றும், தனது அலுவலகத்தை புணேவுக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில், வங்கி மேலாளரை கன்னட மொழியில் பேசுமாறு கூறிய விடியோ வைரலான நிலையில் கௌஷிக் முகர்ஜி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

பெங்களூரில் உள்ள தனது நிறுவனத்தை ஆறு மாத காலத்துக்குள் புணேவுக்கு மாற்றிவிட இருப்பதாகவும், கன்னடம் பேசத் தெரியாத ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மொழிப் பிரச்னையால் நான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், கன்னடம் பேசத் தெரியாத என்னுடைய நிறுவன ஊழியர்கள், அடுத்து பாதிக்கப்படும் நபராக இருக்கக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், உண்மையில் இது என் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் கவலையாக வெளிப்படுத்தப்பட்டது, அதனை நானும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு விதமான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளது. சிலர் எங்கள் அழகிய நகரின் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறையும் என்றும், சிலர் புணே வேண்டாம், காந்திநகர், நொய்டா போன்ற இடங்களுக்குச் செல்லுங்கள் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.

ஒரு சிலர், புணே சென்றால் மராத்தி பேசவில்லை என்று சண்டைபோடுவார்கள் என்றும் கருத்திட்டிருக்கிறார்கள்.

அண்மையில், எஸ்பிஐ வங்கியின் மேலாளர், வங்கி வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேசுமாறு வலியுறுத்தப்பட்டு, அவர் இது இந்தியா, ஹிந்தியில்தான் பேசுவேன் என்று கூறிய விடியோ வைரலான நிலையில், அதற்கு கர்நாடகத்தில் இருக்க வேண்டும் என்றால் கன்னட மொழியில்தான் பேச வேண்டும் என்று பல்வேறு கருத்துகள் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com