மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.

News image
Updated On :24 மே 2025, 11:23 am

DIN

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.

பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலையோரத்தில் வைத்திருப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே சனிக்கிழமை அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியிருக்கிறது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.

மேலும் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மோதலில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 3 பேர் பலியாகினர். இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் வினோத் சிங் மற்றும் வீரேந்திர யாதவ் என இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மற்றொருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றனர். துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு, இரு குழுக்களும் ஒருவரையொருவர் லத்திகளால் தாக்கிக் கொண்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.