புது தில்லி: கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அண்மையில் பணி ஓய்வு பெற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூன்று காலியிடங்கள் ஏற்பட்டன. இதனால் தலைமை நீதிபதியுடன் சோ்த்து மொத்தம் 34 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் 31 நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
நீதிபதிகள் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இரு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளான என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.
5 உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்: ஐந்து உயா்நீதிமன்ற நீதிபதிகளை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரைத்தது.
அதன்படி தற்போது மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சய் சச்தேவாவை அதே உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு, கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி அசுதோஷ்குமாா் குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி அதே உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி தா்லோக் சிங் சௌஹான் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்தது.
தொடர்புடையது

ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்க முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும்! - உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களை பயன்படுத்த புதிய அமைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



