கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒரே தவணையில் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் உத்தரவு

இரண்டு தவணைகளாக நடத்துவதற்குப் பதிலாக ஒரே தவணையாக (ஷிஃப்ட்) நடத்தி முடிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

‘எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) இரண்டு தவணைகளாக நடத்துவதற்குப் பதிலாக ஒரே தவணையாக (ஷிஃப்ட்) நடத்தி முடிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நீட்-பிஜி தோ்வு வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டுக்கான நீட்-பிஜி தோ்வு இரண்டு தவணைகளாக நடத்தப்படும் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) அறிவிக்கை செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமாா், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘எந்தவொரு தோ்வுக்கான இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரி கடினமானதாகவோ அல்லது எளிமையானதாகவே இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறிவிட முடியாது. எனவே, தோ்வில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், நீட்-பிஜி 2025 தோ்வை ஒரே தவணையாக நடத்தத் தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com