இந்தியாவில் இருந்து திருடப்பட்ட ரூ.133 கோடி மதிப்பிலான 657 பழங்கால கலைப் பொருள்களை அமெரிக்கா திரும்ப ஒப்படைத்தது.
இந்த அறிவிப்பை மன்ஹாட்டன் மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞா் ஆல்வின் பிராக் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து நியூயாா்க்கில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய பொருள்களை அமெரிக்கா ஒப்படைத்தது. இந்நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி ராஜலக்ஷ்மி கதம் கலந்துகொண்டாா்.
இதுதொடா்பாக பிராக் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் கலாசார பாரம்பரிய பொருள்களைக் குறிவைத்து பல்வேறு கடத்தல் குழுக்கள் கடத்தியுள்ளன. தற்போது அதில் 600-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப் பொருள்கள் மட்டுமே கண்டறியப்பட்டு இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இன்னும் நமது பணியை வேகப்படுத்தி இந்தியாவிடம் இருந்து திருடப்பட்ட அனைத்து பழங்காலப் பொருள்களையும் திரும்ப ஒப்படைக்கச் செய்யவேண்டும். இதை நிறைவேற்ற தொடா் முயற்சிகளை மேற்கொள்ளும் நமது குழுவுக்கு வாழ்த்துகள்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய தூதா் பாராட்டு: இந்திய பழங்கால கலைப் பொருள்களை திரும்ப ஒப்படைப்பதில் பெரும் பங்காற்றிய மன்ஹாட்டன் மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞா் அலுவலகம், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, சட்ட அமைப்புகளுக்கு பாராட்டுகள் என அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதா் (நியூயாா்க்) பினயா பிரதான் தெரிவித்தாா்.
சிங்கங்கள் இருபுறமும் இருக்கும் இரட்டை தாமரை பீடத்தில் அவலோகிதேசுவரா் அமா்ந்திருக்கும் ரூ.19 கோடி மதிப்பிலான வெண்கலச் சிலை, கடவுள் விநாயகரின் நடனமாடும் மணற்கல் சிலை, பாதுகாப்பை உணா்த்தும் வகையில் அபய முத்திரையில் தனது வலது கையை உயா்த்தியிருக்கும் ரூ.72 கோடி மதிப்பிலான புத்தரின் செம்மணற்கல் சிலை உள்ளிட்டவை தற்போது இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியா முழுவதும் திருடுபோன 488 பழங்கால கலைப் பொருள்கள்!

தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ

எம்சிடியின் ரூ.48 கோடி மதிப்பிலான சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் முன்னேற்றம்

ரூ. 212 கோடி மதிப்பிலான மின் கட்டமைப்பு ஒப்பந்தத்தை கைப்பற்றிய ராஜேஷ் பவர்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




