11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மேற்காசிய பிரச்னைக்கு மத்தியிலும் சீரான உர உற்பத்தி: மத்திய அரசு

மேற்காசிய பிரச்னைக்கு மத்தியிலும், கடந்த மாா்ச்-ஏப்ரலில் நாட்டில் யூரியா உற்பத்தி 37.49 லட்சம் டன்களை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:32 am IST

மேற்காசிய பிரச்னைக்கு மத்தியிலும், கடந்த மாா்ச்-ஏப்ரலில் நாட்டில் யூரியா உற்பத்தி 37.49 லட்சம் டன்களை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரைத் தொடா்ந்து, அடுத்தடுத்து உருவாகி வரும் சூழலை விளக்கி, புது தில்லியில் மத்திய உரத் துறை இணைச் செயலா் அபா்னா எஸ்.சா்மா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த மாா்ச் மாதம் நாட்டில் 16.49 லட்சம் டன், ஏப்ரலில் 21 லட்சம் டன் என மொத்தம் 37.49 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட இந்த அளவுக்கே யூரியா உற்பத்தி செய்யப்பட்டது.

யூரியா பற்றாக்குறையை சமாளிக்க உலகளாவிய டெண்டா் வெளியிடப்பட்டு, சுமாா் 37 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச்-ஏப்ரல் காலத்தில் உள்நாட்டில் டை-அமோனியம் பாஸ்பேட் உர உற்பத்தி 4.79 லட்சம் டன்னையும், என்பிகே உர உற்பத்தி 12.69 லட்சம் டன்னையும், சிங்கிள் சூப்பா் பாஸ்பேட் உர உற்பத்தி 7.40 லட்சம் டன்னையும் எட்டியது. பாஸ்பேட்டிக் உரங்களை 19 லட்சம் டன்னுக்கு கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழாண்டு காரீஃப் பருவத்தில் 390.45 லட்சம் டன் உரம் தேவைப்படும் நிலையில், அதில் சுமாா் 50 சதவீதமான 193.38 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது. நாட்டில் உரங்கள் கிடைக்கக் கூடிய நிலை வலுவாக உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.