விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கைதான 6 வங்கதேசத்தினா் தடுப்பு மையத்துக்கு மாற்றம்

விசா நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்ததற்காக தில்லி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட 6 வங்கதேசத்தினா், தடுப்பு மையத்திற்கு மாற்றம்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:48 am IST

இரட்டை நுழைவு இசைவு (விசா) நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்ததற்காக தில்லி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட 6 வங்கதேசத்தினா், தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மத்திய தில்லியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தினா் இல்லங்களில் தில்லி காவல் துறையினா் சோதனை நடத்தினா். நபி கரீமில் உள்ள அரகாஷன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அந்த 6 பேரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா்.

அவா்களின் விசாக்கள் (நுழைவு இசைவு) மற்றும் குடிவரவுப் பதிவுகளைச் சரிபாா்த்ததில், அவா்களின் விசாக்கள் செல்லுபடியாகும் நிலையில் இருந்தபோதிலும், ஒவ்வொரு வருகைக்கும் அதிகபட்சமாக 15 நாள்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டிருந்ததும், அதை அவா்கள் மீறித் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, அந்த ஆறு பேரும் வெளிநாட்டினா் பிராந்தியப் பதிவு அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அந்த அலுவலகம் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பித்து, அவா்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்காக ஒரு தடுப்பு மையத்திற்கு மாற்றியது.

அந்த ஆறு பேருக்கும் இதற்கு முன்னா் எந்தக் குற்றச் செயல்களிலும் தொடா்பு இல்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.