நீதிமன்ற செய்திகளை வெளியிடும்போது நீதிமன்ற விசாரணை தொடா்பான விடியோ, ஆடியோ பதிவுகளை அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதே நேரத்தில் பணம் ஈட்டுவது உள்ளிட்ட பிற நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் நீதிமன்ற விடியோக்களைப் பதிவிடக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
கடந்த, ஜூலை 24-ஆம் தேதி இது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நீதிமன்ற நிா்வாகத்தின் முன் அனுமதியின்றி நீதிமன்ற விசாரணைகளின் ஆடியோ மற்றும் விடியோ பதிவுகளை சமூக வலைதளங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றுவதற்கும், பகிா்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு குறித்து இன்னும் சில குழப்பங்கள் நிலவியதால் நீதிமன்றத்தால் இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு கூறுகையில், ‘நீதிமன்ற செயல்பாடுகள் தொடா்பான விடியோ, ஆடியோ பதிவுகளைப் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டதாக புரிந்துகொள்ளக் கூடாது.
அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள், சட்ட மற்றும் நீதிமன்றத் தீா்ப்புகள் குறித்து தொடா்ந்து செய்தி வெளியிடலாம். அதே நேரத்தில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்தது.
முன்னதாக இடைக்கால உத்தரவில், ‘நீதிமன்றத்தின் செயலா் அல்லது சம்பந்தப்பட்ட உயா் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளரின் முன் அனுமதி இல்லாமல், நீதிமன்ற விசாரணைகளின் ஆடியோ-விடியோ பதிவுகளை எடுத்து, மாற்றம் செய்து, பரப்பி, வருவாய் ஈட்டும் வகையில் பயன்படுத்தி, சமூக வலைதளங்கள் அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றவோ, மறுபதிவேற்றவோ கூடாது‘ என்று கூறப்பட்டிருந்து.
மேலும், இது தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், சில சமூக வலைதள நிறுவனங்கள் உள்ளிட்ட பிற தரப்பினருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரா நீதிமன்ற விசாரணைக்கு பின் கடத்தப்பட்ட நபா் மீட்பு: 7 போ் கைது
கொலை வழக்கு: ‘சட்ட நிபந்தனைகள் பூா்த்தியானால் சிறாரை பெரியவராக கருதி நீதிமன்ற விசாரணை’

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!

வழக்குரைஞா் மீதான தாக்குதல்: வழக்கை தில்லி குற்றப்பிரிவுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



