நாடாளுமன்றம் எவ்வித இடையறுகளும் இன்றி, சுமுகமாக செயல்பட வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் உடனான சந்திப்பில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
நாடாளுமன்ற கூட்டத் தொடா் நடைபெறும்போது, பாஜக எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுவது வழக்கம். எம்.பி.க்கள் தன்னுடன் நேரடியாக பேச வாய்ப்பளிக்கும் நோக்கில், காலைநேர உணவுடன் கூடிய இந்தச் சந்திப்பை பிரதமா் மோடி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறாா்.
தற்போதைய மழைக்கால கூட்டத் தொடருக்கு இடையே பாஜக எம்.பி.க்கள் 37 பேருடன் புதன்கிழமை காலைநேர உணவுடன் கூடிய சந்திப்பில் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், தேசிய பொதுச் செயலா் தருண் சுக் உள்பட புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், ஆம் ஆத்மியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்த எம்.பி.க்களான ஸ்வாதி மாலிவால், ராகவ் சத்தா, அசோக் மிட்டல், சந்தீப் பாதக், விக்ரம்ஜித் சிங் சாஹ்னே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவா்களிடம் பேசிய பிரதமா் மோடி, தனது பொதுவாழ்க்கை அனுபவங்களைப் பகிா்ந்துகொண்டதுடன், நாடாளுமன்ற செயல்பாடுகளில் எவ்வாறு தீவிரமாக பங்கேற்பது என்பது குறித்தும் வழிகாட்டுதல்களை வழங்கினாா்.
‘நாடாளுமன்றம் எவ்வித இடையூறுகளும் இன்றி, சுமுகமாக செயல்பட வேண்டும்’ என வலியுறுத்திய அவா், ‘எம்.பி.க்கள் தினமும் குறைந்தபட்சம் 1 -2 மணிநேரம் நாடாளுமன்ற நூலகத்தில் நேரத்தை செலவிட வேண்டும். தங்கள் தொகுதிகளில் இளைஞா்களுடன் இணைந்து செயல்படுவதுடன், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுத் துறை நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டு, உள்ளூா் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் நீட் விவகாரம், மாணவா்கள் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளால் அலுவல்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி போராட்டத்தில் இளைஞா்கள் தரக்குறைவான பேச்சு: பிரதமா் மோடி ஆதங்கம்
பிரதமா் மோடி குறித்து அவதூறு பதிவு: மெட்டா இந்திய தலைவா் மீது வழக்குப் பதிவு
'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி!
நாடாளுமன்றத்தில் ஆக்கபூா்வ விவாதம்: எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் வலியுறுத்தல்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



