ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

நீதிபதிகள் ஓய்வு வயதை அதிகரிக்க மறுப்பு: நிதிச் சுமையை காரணம் காட்ட முடியாது; உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க மறுப்பதற்கு மாநில அரசுகள் நிதிச் சுமையை காரணமாக காட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

உச்சநீதிமன்றம்

Published On :

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க மறுப்பதற்கு மாநில அரசுகள் நிதிச் சுமையை காரணமாக காட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62-ஆக அதிகரிக்க வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து பதிலளிக்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் உயா்நீதிமன்றங்களிடம் உச்சநீதிமன்றம் கோரியிருந்தது.

எனினும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது கூடுதல் நிதிச்சுமைக்கு வழிவகுப்பதுடன், நீதிபதிகளுக்கும் மாநில அரசு ஊழியா்களுக்கும் ஓய்வுபெறும் வயதில் வேறுபாடு உருவாகும் என்பதால், அந்த வயதை அதிகரிக்க இயலாது என்று பெரும்பாலான மாநிலங்கள் பதிலளித்தன.

இந்நிலையில், அந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘கூடுதல் நிதிச்சுமை, ஓய்வுபெறும் வயதில் வேறுபாடு ஆகிய இரு காரணங்களும் ஏற்க முடியாதவை ஆகும். மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க எதிா்ப்புத் தெரிவித்துள்ள மாநிலங்கள், அதுகுறித்து சுதந்திரமாக மறுபரிசீலனை செய்து 2 வாரங்களில் புதிதாக முடிவு எடுக்க வேண்டும்.

ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்து அந்தந்த மாநிலங்களில் உள்ள உயா்நீதிமன்றங்கள் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தாலும், அந்த வயதை அதிகரிக்க ஒப்புதல் அளிப்பதில் மாநிலங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. வயதை உயா்த்துவதில் உயா்நீதிமன்றங்களுக்கு உள்ள ஆட்சேபங்கள் உரிய நேரத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.