வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!

பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் - கோப்புப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:25 pm IST

பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளா் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு கோவாவில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க சென்றபோது சக பெண் பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘தெஹல்கா’ பத்திரிகையின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியா் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கை விசாரித்து வந்த கோவாவின் மபுசா அமா்வு நீதிமன்றம், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் தேஜ்பாலை விடுவித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜம்சண்டேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோவா நீதிமன்றத்தின் தீர்ப்பை வியாழக்கிழமை ரத்து செய்தது.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376(2)(டி), 376(2)(கே) மற்றும் 354ஏ, 354பி ஆகியவற்றின் கீழ், தேஜ்பாலை குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தண்டனை அறிவிப்பதற்கு முன்னதாக நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்த தேஜ்பால், தனக்கு தற்போது 62 வயதாகிறது என்றும், கருணை காட்டுமாறும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் ரூ. 10.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், சிறைத் துறை அதிகாரிகள் முன் ஆஜராக தேஜ்பாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Summary

Rape case! Journalist Tarun Tejpal sentenced to 10 years in prison!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.