வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

ஜார்கண்டில் மாணவர் போராட்டம்! கோயில், மசூதி, குருத்வாராக்களிலிருந்து வரும் உணவு!

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்திற்கு ஆதவளிப்பது பற்றி..

News image

போராட்ட மாணவர்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள் - X

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:49 pm IST

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்திற்கு ஆதவளிக்கும் வகையில் கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் என பலரும் உணவு வழங்கி ஆதரவு கரம் நீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூலை 25 முதல் ராஞ்சியிலுள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

13-வது நாளை எட்டிய இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தலைநகரின் மையப்பகுதியில் முகாமிட்டுள்ள மாணவர்களுக்குக் கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் மற்றும் தனிநபர்கள் உணவு வழங்கி ஆதரவளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் 6 போராட்டக்காரர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

கடந்த சில நாள்களாக நகரில் பெய்துவரும் கனமழையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்களுகள் மன உறுதியுடன் போராடி வருகின்றனர். ஜெய்பால் சிங் மைதானத்தில் போராடும் மாணவர்கள் தற்காலிக தார்ப்பாய் கூடாரங்களின் கீழ் கூடியிருக்கும் நிலையில், சமுதாய சமையலறைகளும் தனிநபர்களும் மத வேறுபாடின்றி அவர்களுக்குச் சூடான உணவை வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற நீட் போராட்டத்தின்போது காணப்பட்ட காட்சிகளையே இந்த காட்சிகள் நினைவூட்டுகின்றன. ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்தனர்.

அதன்படி, ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்துக்கு சனி கோயில், பஹாடி கோயில், அருகிலுள்ள மசூதி மற்றும் குருத்வாராக்களிலிருந்து ஏராளமானோர் உணவு வழங்கி வருகின்றனர். மாவட்டங்கள் முழுவதிலுமிருந்து பல குடும்பங்கள் வீட்டில் சமைத்த உணவை எங்களுக்கு அனுப்புகின்றன.

மாணவர்களும் தங்கள் வீடுகளிலிருந்து உணவைக் கொண்டு வருகிறார்கள் என்று ராஞ்சியில் உள்ள போராட்டக் களத்தில் உணவை விநியோகித்து வரும் மாணவர் தன்னார்வலர் அஷுதோஷ் லால், பிடிஐயிடம் கூறினார்.

As the stir against alleged examination irregularities in Jharkhand gains steam, temples, mosques and gurudwaras, as well as individuals, are ensuring the students camping at the heart of the capital city for 13 days now are fed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.