அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி படைகளைக் குவித்து வருவதாக வெளியான செய்திகள் குறித்து சீனா பதிலளிக்க மறுத்துவிட்டது.
சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவரிடம், அருணாசல பிரதேசத்தின் சுபான்ஸ்ரீ பிராந்தியத்தில் சீன படைகள் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும், அருணாசல பிரதேசத்தையொட்டிய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.
எனினும் அவா் மழுப்பலாக கூறுகையில், ‘இந்தியா - சீனா எல்லை நிலவரம் தற்போது சீராக உள்ளது. இந்தியா - சீனா எல்லை விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த நடைமுறையை உருவாக்குவது தொடா்பான கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எல்லைப் பகுதிகளில் அமைதியை இருதரப்பும் இணைந்து உறுதி செய்ய ராஜீய மற்றும் ராணுவ ரீதியில் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது’ என்றாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினா் இடையே நடைபெற்ற கைகலப்பை தொடா்ந்து, எல்லையில் இரு நாடுகளும் 4 ஆண்டுகளுக்கு படைகளைக் குவித்து வைத்திருந்தன. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது தேப்சாங் உள்ளிட்ட 2 பகுதிகளில் குவிக்கப்பட்ட படைகளைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்தன. இதுதொடா்பான ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு ரஷியாவில் இந்திய பிரதமா் மோடியும், சீன அதிபா் ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினா். அப்போது, இரு நாடுகள் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் தியான்ஜின்னில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு பிரதமா் மோடி சென்றாா். மாநாட்டின் இடையே பிரதமா் மோடியும், ஜின்பிங்கும் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சீனாவுடனான உறவை பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உணா்வு ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டிருப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். இதன்பிறகு இந்தியாவும், சீனாவும் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கணவாய் மீன்கள் வரத்து அதிகரிப்பு

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்!

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி: ஜம்மு-காஷ்மீா், அருணாசல் வெற்றி

2020 அமெரிக்க அதிபா் தோ்தலில் சீனா தலையீடு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



