ரீல்ஸ் யுகத்தில் வாழும் இளம்தளைமுறையினர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தையைப் படிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் "இந்தியக் குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்" என்ற சுயசரிதை புத்தகத்தைப் பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
வெளியீட்டு விழாவில் பேசிய அவர், விடாமுயற்சி ஒருவரின் இடர்களைக் கடந்து, மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவிக்கு உயர்வதற்கு எவ்வாறு உதவும் என்பதை ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை காட்டுகிறது.
ஓய்வில்லை
முன்னாள் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் அவர் ஓய்வெடுக்கவில்லை. இந்திய ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கக்கூடிய "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற முன்னெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இவ்விவகாரத்தில் கோவிந்த் மேற்கொண்ட முயற்சிகள், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிவரும் தொடர்ச்சியான பங்களிப்பின் ஒரு பகுதியாகும்.
குறிப்பிட்ட காலகட்டத்தை அனுபவித்த ஒருவரின் வாழ்க்கை மூலம் அதைப் புரிந்துகொள்ளச் சுயசரிதைகள் ஒரு வாய்ப்பை வழங்குவதால், இளைஞர்கள் சுயசரிதைகளைப் படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ரீல்ஸ் யுகம்
ரீல்ஸ் யுகத்தில், சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்களை சுயசரிதையின் மூலம் தங்களை ஈர்த்து நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.
கோவிந்தின் சுயசரிதை "இந்திய ஜனநாயகத்தின் ஒரு பாரம்பரியச் சின்னமாக" மாறும், புதிய தலைமுறை அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். எதிர்காலத்தில் கோவிந்தைப் போன்ற இன்னும் பல இளைஞர்கள் நமக்குத் தேவை; அதாவது, சூழ்நிலைகளால் முறியடிக்கப்படாமல், ஒவ்வொரு சவாலையும் முறியடிக்கும் உறுதியைக் கொண்ட இளைஞர்கள். அவர்கள் சுயசார்பு இந்தியாவுக்கான பாதையை அமைப்பார்கள். கோவிந்தின் சுயசரிதை இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும்.
வாழ்க்கையும், போராட்டங்களும்
கோவிந்தின் வாழ்க்கையும் போராட்டங்களும் தனிப்பட்டவை என்றாலும், "அந்தப் போராட்டங்களின் வெற்றிகள் இந்திய ஜனநாயகத்திற்குச் சொந்தமானவை" என்பதால் இந்த நூலின் தலைப்பு மிகவும் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கோவிந்த், தனது சிறுவயதுக் துன்பங்களையும், தன்னைச் சுற்றியுள்ள சூழலிலிருந்து தான் கற்றுக்கொண்ட பாடத்தையும் நினைவு கூர்ந்தார்.
வம்சாவளி அல்லது சமூக நலன்களை விடத் தேச நலனுக்கே முன்னுரிமை அளிக்கும் கட்சி என்பதால் தான் பாஜகவுடன் இணைந்ததாக கோவிந்த் தெரிவித்தார்.
உயிருள்ள வடிவம்
நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மக்களவை தலைவர் ஓம் பிர்லா, கோவிந்தை மன உறுதியின் "உயிருள்ள வடிவம்" என்று வர்ணித்ததுடன், இந்தியாவின் தூதரக உறவுகளை வலுப்படுத்தியதற்காக அவரைப் பாராட்டினார்.
இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Prime Minister Narendra Modi on Wednesday urged young people to read autobiographies of people they admire, saying that in the "era of reels", social media influencers could take them down certain paths, but a "shortcut will cut you short".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம்: நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்
விடியோக்கள்

முதல்வரின் தனித்தீர்மானம்; உதயநிதியின் முழு உரை! | DMK | TVK | CM Vijay



