உத்தரகண்ட்டின் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கார்கே ஆற்றிய உரைக்குப் பிறகு மேடை சுத்திகரிப்பு செய்தவர்களை ஜெ.பி. நட்டா கடுமையாக கண்டித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வந்து மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மக்களவை கூட்டத்தொடருக்குப் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் வந்திருந்த நிலையில், அவை கூடியதும் பல்வேறு பிரச்னைகள் முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, கார்கே ஹல்த்வானியில் தனது உரைக்குப் பிறகு மேடை சுத்திகரிப்பட்டதாகவும், மேடையைச் சுத்திகரித்தவர்கள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவையில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ராம்லீலா உரையின்போது தான் எந்த மதத்தையோ அல்லது சமூகப் பிரிவையோ குறிப்பிடவில்லை. தனது உரையில் மக்களின் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினேன். இருப்பினும் பாஜகவினர் அங்கு வேள்வி நடத்தி மேடையை 'சுத்திகரிப்பு' செய்தனர்.
ஜனநாயகம் இப்படித்தான் செயல்படுகிறதா? அரசியலமைப்பை நீங்கள் எவ்வாறு பாதுகாக்கிறீர்கள்? என்று கார்கே கேள்வி எழுப்பினார். இப்பிரச்னையை அரசியலாக்கத் தனக்கு விருப்பமில்லை, ஆனால் மேடையைச் சுத்திகரிப்பு செய்ததன் மூலம் அவர்கள் தன்னை அவமதித்துவிட்டதாக அவர் கூறினார்.
கார்கே எழுப்பிய விவகாரம் குறித்துப் பதிலளிக்குமாறு அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், நட்டாவைக் கேட்டுக்கொண்டார். இது காங்கிரஸுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் மிகவும் வருத்தமளிக்கும் ஒரு நிகழ்வாகும்.
பாஜக இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிப்பதில்லை. நாங்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவோம்; இந்தச் சம்பவத்தை நான் கண்டிக்கிறேன் என்று அவர் கூறினார். அவைத் தலைவர் ராதாகிருஷ்ணனும் இச்சம்பவத்தைக் கண்டித்ததுடன், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு அரசை வலியுறுத்தினார்.
Leader of Opposition in Rajya Sabha Mallikarjun Kharge on Thursday alleged that people associated with the BJP purified the stage at Ramlila Maidan in Uttarakhand where he had made a speech.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!

நீட் முதுநிலைத் தோ்வு ஏற்பாடுகள்: மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா ஆய்வு

மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!

பேச்சுவார்த்தைக்குத் தயார்! எங்கள் அலுவலகத்துக்கோ இல்லத்துக்கோ சிஜேபியினர் வரலாம்: ஜெ.பி. நட்டா
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |



