FOLLOW US

ON GOOGLE DISCOVER

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

கார்கே பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையை சுத்திகரிக்க வேள்வி நடத்திய பாஜக!

பாஜகவுக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு...

News image

கார்கே பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையை சுத்திகரிக்க வேள்வி நடத்திய பாஜக - x

Updated On :13 ஆகஸ்ட் 2026, 11:39 am IST

உத்தரகண்டில் தான் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையைச் சுத்திகரிக்க பாஜகவினர் வேள்வி நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதான் ஜனநாயகமா என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா திடலில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி காங்கிரஸ் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார்.

இந்த நிலையில், பாஜகவுடன் தொடர்புடைய ஸ்ரீ ராம் சேனை என்ற அமைப்பு, ராம்லீலா திடலில் சுத்திகரிப்பு செய்யும் வேள்வியை நடத்தியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

காங்கிரஸின் குற்றச்சாட்டை பாஜக மறுத்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுமிடையே கருத்து மோதல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,

”ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நான் உரையாற்றினேன். அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது நான் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் அல்லது மதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. அரசின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்னைகளை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.

ஆனால் எனது உரைக்குப் பிறகு, அந்த மேடையைச் 'சுத்திகரிப்பதற்காக' பாஜகவினர் அங்கு ஒரு வேள்வி நடத்தினர். ஜனநாயகத்தில் இதுதான் முறையா? நீங்கள் அரசியலமைப்பை எப்படிக் காப்பாற்றுகிறீர்கள்? நான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று தெரிவித்தார்.

Summary

BJP performs ritual to purify the stage where Kharge participated in a public meeting!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.