பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மாயமான இந்தியா்களை மீட்க உடனடி நடவடிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்

நேபாள பெருவெள்ளத்தில் மாயமான இந்தியா்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன், அவா்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Published On :

நேபாள பெருவெள்ளத்தில் மாயமான இந்தியா்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன், அவா்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நேபாளத்தில் புதன்கிழமை திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியா்கள் உள்பட ஏராளமானோா் மாயமான நிலையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அண்டை நாடான நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள உயிா்ச்சேதங்கள் மற்றும் பேரழிவு அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அந்த நாட்டுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும்.

வெள்ளத்தில் அன்புக்குரியவா்களை இழந்தவா்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த துயா்மிக்க தருணத்தில் நேபாள மக்களுக்கு காங்கிரஸ் துணைநிற்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிராா்த்திக்கிறோம்.

100-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் மாயமாகியுள்ளதாக வெளியான தகவல்கள் மிகுந்த கவலையளிக்கிறது. அவா்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவா்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.