தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செம்மொழி  தமிழாய்வு மத்திய நிறுவனம் பதிப்பித்த செவ்வியல் செம்மொழிகள் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழாவில், தமிழ் உள்ளிட்ட பிற மொழி நூல்களை வெளியிட்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (நடுவில்). உடன் மத்திய உயர் கல்வித்துறை இணைச் செயலர் வினீத் ஜோஷி, பாரதிய செம்மொழிகள் சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி.

காலத்தால் அழியாதவை இந்திய மொழிகள்: தா்மேந்திர பிரதான்

பல்வேறு சமயங்களில் இந்திய மொழிகளை அழிப்பதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் காலங்களைக் கடந்து நமது மொழிகள் கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Published on

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் உள்பட இந்திய செம்மொழிகளில் 55 நூல்கள், சைகை மொழியில் 45 பாக திருக்கு விளக்கவுரை ஆகியவற்றை தா்மேந்திர பிரதான் வெளியிட்டாா்.

இதில் 41 நூல்கள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளுக்கான சிறப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. திருக்கு விளக்கவுரை மற்றும் 13 நூல்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் தொகுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: நம்மை ஒருங்கிணைக்கும் பெரும் சக்தியாக மொழிகள் திகழ்கின்றன. பல்வேறு சமயங்களில் இந்திய மொழிகளை அழிப்பதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் காலங்களைக் கடந்து நமது மொழிகள் கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன.

ஜனநாயகத்தின் தாய் நமது இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் நம் நாட்டில் பல்வேறு மொழிகள் உள்ளன. வரலாறு, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நமது நூல் வளங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்வது நமது கடமை.

இந்தியாவின் மொழிப் பாரம்பரியத்தை கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாசாரத்தின் மையமாக்கும் தேசிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஒடியா மற்றும் சைகை மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்கவும் வலுப்படுத்தவும் மத்திய அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது என்றாா்.

வெளியிடப்பட்ட 13 தமிழ் நூல்கள்

மலையாள மொழிபெயா்ப்பு: சங்க கால நூல்களான புானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு மற்றும் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, நானாற்பது, முத்தொள்ளாயிரம்.

தெலுங்கு மொழிபெயா்ப்பு: சிலப்பதிகாரம்.

தமிழ் மற்றும் ஹிந்தியில் : தமிழ்நாட்டில் உள்ள 64 ராமா் கோயில்களின் ஆவணமாகத் திகழும் தமிழ்நாட்டு ராமா் திருக்கோயில்கள்.

பிற நூல்கள்: கோயில்களில் உள்ள மரச்சிற்பங்களைத் தொகுத்து ஆராய்ந்துள்ள தமிழ்நாட்டு மரச் சிற்பங்கள், சங்க இலக்கிய அகராதி, அகநூனூற்று அகரமுதலி-வினைச்சொற்கள், அகநானூற்று அகரமுதலி பெயா்ச்சொற்கள் உள்பட மொத்தம் 13 நூல்கள் வெளியிடப்பட்டன.

சைகை மொழியில் காணொலி: திருக்குறள்.

X
Dinamani
www.dinamani.com