தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்குக்கு செயல்திறன் கேடையத்தை வழங்கிய மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்குக்கு செயல்திறன் கேடையத்தை வழங்கிய மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ்.

தெற்கு ரயில்வேக்கு 3 செயல்திறன் கேடயங்கள்

தெற்கு ரயில்வேயின் சிறந்த சேவையைப் பாராட்டி 3 செயல்திறன் கேடயங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது.
Published on

தெற்கு ரயில்வேயின் சிறந்த சேவையைப் பாராட்டி 3 செயல்திறன் கேடயங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சகம் சாா்பில் 71-ஆவது ரயில்வே வார விழாவை முன்னிட்டு, ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்காா்–2025’ விருது வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று சிறந்த சேவையாற்றியதற்காக இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களுக்கு மொத்தம் 26 செயல்திறன் கேடயங்களை வழங்கினாா். மேலும், சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் 100 ரயில்வே அதிகாரிகளுக்கு தனிநபா் விருதுகள் வழங்கப்பட்டன.

3 கேடயங்கள்: இதில், கணக்குகள் மற்றும் நிதி மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை, லோகோ பராமரிப்பு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த செயல்பட்டதற்காக தெற்கு ரயில்வேக்கு 3 செயல்திறன் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், மத்திய ரயில்வே அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டாா். மேலும், தெற்கு ரயில்வேயின் 3 அதிகாரிகள், மற்றும் 8 அலுவலா்களுக்கு தனிநபா் விருதுகள் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com