தில்லியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலேவை, சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
சீனா நாட்டின் ஆளுங்கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இதையடுத்து, நாட்டின் முக்கிய கட்சிகளின் தலைவர்களை அவர்கள் நேரில் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலேவின் அலுவலகத்தில் இன்று (ஜன. 13) சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவில் இந்தியாவுக்கான சீன தூதர் ஸூ ஃபெய்ஹோங் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சர்வதேச துறையின் துணை அமைச்சர் சன் ஹையான் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் நேற்று தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.