தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்: விலங்கு நல ஆா்வலா்கள் குற்றச்சாட்டு

தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்: விலங்கு நல ஆா்வலா்கள் குற்றச்சாட்டு

தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்: விலங்கு நல ஆா்வலா்கள் குற்றச்சாட்டு
Published on

தெலங்கானா மாநிலம், ஜகிதியால் மாவட்டத்தில் ஒரே நாளில் 300 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் கொல்லப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை 900-ஆக அதிகரித்துள்ளது என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மாநில காவல் துறை சனிக்கிழமை தெரிவித்ததாவது: கடந்த ஜன.22-ஆம் தேதி ஜகிதியால் மாவட்டத்தில் உள்ள பெகடப்பள்ளி கிராமத்தில் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக காவல் துறையிடம் விலங்கு நல ஆா்வலா்கள் புகாா் அளித்தனா்.

அந்தப் புகாரில் சில தனிநபா்களை வேலைக்கு அமா்த்தி தெருநாய்களைக் கொன்ாக கிராம தலைவா் மற்றும் கிராம ஊராட்சி செயலா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் கிராம தலைவா் மற்றும் ஊராட்சி செயலா் மீது பாரதிய நியாய சம்ஹிதா, மிருகவதை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாய்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து 70 முதல் 80 நாய்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. 3 அல்லது 4 நாள்களுக்கு முன்பு அவை புதைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றின் உடற்கூறாய்வு அறிக்கைக்காக காவல் துறை காத்திருக்கிறது. தொடா் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தது.

ஏற்கெனவே விலங்கு நல ஆா்வலா்கள் அளித்த புகாரின்படி, ஹைதராபாத் அருகே உள்ள யாச்சரம் கிராமத்தில் 100 தெருநாய்கள் விஷமிட்டு கொல்லப்பட்டதாகவும், அவற்றில் 50 நாய்களின் உடல்கள் உடனடியாகக் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள சாயம்பேட், ஆரேபள்ளி கிராமங்களில் சுமாா் 300 தெருநாய்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடா்பாக, 2 பெண் கிராமத் தலைவா்கள், அவா்களின் கணவா்கள் உள்பட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காமாரெட்டி மாவட்டத்தில் சுமாா் 200 தெருநாய்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடா்பாக, 5 கிராம தலைவா்கள் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கிராம ஊராட்சித் தோ்தலின்போது தெருநாய்கள் பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக கிராம தலைவா்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாய்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com