

மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலகத்தில், முதல்வர் மமதா பானர்ஜியை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களும் மக்களவை உறுப்பினர்களுமான அகிலேஷ் யாதவ் மற்றும் டிம்பிள் யாதவ் தம்பதி அவர்களது குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை அம்மாநில தலைமைச் செயலகத்தில் அகிலேஷ் யாதவ் இன்று (ஜன. 27) மதியம் 1.40 மணியளவில் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து, அகிலேஷ் யாதவ் கூறுகையில்,
“சகோதரி (மமதா பானர்ஜி) அமலாக்கத்துறையை வீழ்த்தியுள்ளார், தற்போது அவர் பாஜகவை மீண்டும் தோற்கடிப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.