

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்தித்து பேசினார்.
புதுதில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்தித்ததுடன், இந்தியா - அமெரிக்கா உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், "செர்ஜியோ கோரை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் உரையாடல் இருநாட்டு கூட்டாண்மையின் பல பரிமாணங்களை உள்ளடக்கியது.
இந்தியா - அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த நம்பிக்கையும் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலி தொடர்பான மாநாடு நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், உலகத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ஜெய்சங்கரை செர்ஜியோ கோர் சந்தித்துப் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.