முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவெ கௌடாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 29) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, முக்கிய விவகாரங்களில் ஹெச்.டி. தேவெ கௌடாவின் ஆழமான சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை எனவும், இந்தியாவின் வளர்ச்சியில் அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார்.
இத்துடன், முன்னாள் பிரதமர் தேவெ கௌடா கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பிரதமர் மோடி கன்னடத்தில் தனது எக்ஸ் தளப் பதிவை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, கர்நாடகத்தின் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து ஹெச்.டி. தேவெ கௌடா மற்றும் அவரது மகனும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி ஆகியோர் அவர்களது சொந்த ஊரான ஹாசனில் மாபெரும் பேரணியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஹெச்.டி. தேவெ கௌடா இடையிலான இந்தச் சந்திப்பு மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.