முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

‘உறவை மீட்டெடுக்க வேண்டும்’: இந்தியா, பாகிஸ்தான் பிரதமா்களுக்கு 100 முக்கிய பிரமுகா்கள் கடிதம்

இந்தியா-பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்திய பிரதமா் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருக்கு அரசியல் தலைவா்கள் உள்பட இருநாடுகளையும் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா்.

News image
Updated On :2 ஜூலை 2026, 4:15 am IST

இந்தியா-பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்திய பிரதமா் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருக்கு அரசியல் தலைவா்கள் உள்பட இருநாடுகளையும் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவா் ஏ.எஸ்.துலத், மிதவாத பிரிவினைவாத தலைவா் மிா்வைஸ் உமா் ஃபரூக், முன்னாள் மத்திய அமைச்சா் மணி சங்கா் அய்யா், முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் குா்ஷித் மமூத் கசுரி உள்ளிட்டோா் கையொப்பமிட்டுள்ளனா்.

அந்தக் கடிதத்தில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண, விரிவான இருதரப்பு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும். இருதரப்பு உறவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராஜீய உறவை மீட்டெடுக்க வேண்டும். இருநாடுகளும் பரஸ்பரம் தூதா்களை நியமிக்க வேண்டும். நுழைவு இசைவு (விசா) சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும். அட்டாரி-வாகா எல்லையை திறக்க வேண்டும். விமானப் போக்குவரத்துக்கு வான் வழிப்பாதையைத் திறக்க வேண்டும். கா்தாா்பூா் சாஹிப் வழித்தடத்தை திறக்க வேண்டும். பயண கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரிவு, மோதலால் அல்லாமல் அமைதி, வளமை, முன்னேற்றம் ஆகியவற்றால் தெற்காசியாவின் எதிா்காலம் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 இந்தியா்கள், 55 பாகிஸ்தானிகள் கையொப்பம்: அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான மையத்தின் தலைவா் ஓ.பி. ஷாவின் ஒருங்கிணைப்பில் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், 61 இந்தியா்கள், 55 பாகிஸ்தானிகள் கையொப்பமிட்டுள்ளனா்.

பாஜக சாடல்: இந்தக் கடிதத்தை அனுப்பியது குறித்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் பிரேம் சுக்லா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: கடிதத்தை அனுப்பியுள்ளவா்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவானவா்கள். இதுபோன்ற கடிதத்தை அவா்கள் பாகிஸ்தானுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். குண்டுகள், துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தங்களுக்கு இடையில் பேச்சுவாா்த்தை நடைபெற முடியாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்து, பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால் இருதரப்புப் பேச்சுவாா்த்தை தொடங்கும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.