அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

வெள்ளத்தில் அடித்து வரும் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வேண்டாம்! ஆபத்து

வெள்ளத்தில் அடித்து வரும் சிலிண்டர்களை மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுரை

News image

வெள்ளத்தில் சிலிண்டர்கள் - cylinder

Updated On :9 ஜூலை 2026, 1:06 pm IST

மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் பகுதியில், வெள்ளத்தில் அடித்து வரும் சிலிண்டர்களை மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது, எச்பிசிஎல் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து, அங்கிருந்த 3000 எரிவாயு உருளைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெள்ளம் அடித்துச் செல்லும்போது அதில் ஏராளமான சிலிண்டர்கள் உருண்டு ஓடுவதைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை காரணமாக, எரிவாயு நிரப்பும் ஆலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, அங்கே வைக்கப்பட்டிருந்த உருளைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவை அனைத்தும் படல்கங்கா ஆற்றில் சேர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பலரும், அந்த ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் பாலத்தில் நின்றுகொண்டு, ஆற்றில் எரிவாயு உருளைகள் அடித்துச் செல்லப்படுவதை விடியோ எடுத்துள்ளனர்.

இது குறித்து எச்பிசிஎல் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மக்கள் எங்கேனும் சிலிண்டர்கள் கரை ஒதுங்கியிருப்பதைப் பார்த்தால், உடனடியாக நிறுவனத்துக்குத் தகல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

எரிவாயு உருளைகள் அனைத்துமே காலியானவை அல்ல, சில எரிவாயு உருளைகள் எரிவாயு நிரப்பப்பட்டும் உள்ளன. அருகில் உள்ள எந்த எச்பிசிஎல் நிறுவனமாக இருந்தாலும், தாசில்தார் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்கூட, எரிவாயு உருளைகளை ஒப்படைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்களைப் பார்க்கும் பொதுமக்கள் அதனைத் தூக்கிச் செல்வதோ, வீட்டில் பயன்படுத்த திறப்பதோ, அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.