எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

சோனம் ரகுவன்ஷிக்கு ஜாமீன் வழங்கியது நியாயமா? விரிவான அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

தேனிலவுக் கொலை பற்றி விரிவான அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது பற்றி..

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :9 ஜூலை 2026, 1:34 pm IST

மேகாலயா தேனிலவுக் கொலையில் ரகுவன்ஷிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது விவகாரத்தில், விரிவான அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தேனிலவுக் கொண்டாட அழைத்துச் சென்ற கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், சோனம் ரகுவன்ஷிக்கு மேகாலயா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், கைது குறிப்பாணையில் உள்ள தட்டச்சுப் பிழை மட்டுமே கைது நடவடிக்கையைச் செல்லாததாக்கி ஜாமீன் வழங்கப் போதுமானதா? என்ற சட்டக் கேள்வியை விரிவான அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு கைது குறிப்பாணையில் தட்டச்சுப் பிழை இருந்ததைக் காரணம் காட்டி ரகுவன்ஷிக்கு ஜாமீன் வழங்கிய மேகாலயா உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை நியாயமானதா என்பதையும் விரிவாக ஆராயவிருப்பதாகக் குறிப்பிட்டது.

முன்னதாக, ஜூலை 3 அன்று, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய மற்றொரு அமர்வு, ரகுவன்ஷிக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கில், இன்று மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த அதிர்ச்சியூட்டும் கொலை வழக்கில் கைது குறிப்பாணையில் தவறான சட்டப் பிரிவு குறிப்பிடப்பட்டிருப்பது (குறிப்பாக தட்டச்சுப் பிழை) மட்டுமே கைது நடவடிக்கையைச் செல்லாததாக்கி ஜாமீன் வழங்கப் போதுமானதா என்ற கேள்வியை எழுப்பினார்.

பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 103(1)-க்கு (கொலைக்கான தண்டனை) பதிலாக பிரிவு 403-ஐ (அந்தச் சூழலில் அப்பிரிவு பொருந்தாது) குறிப்பாணை குறிப்பிட்டிருந்ததால், முறையான எழுத்துப்பூர்வமான கைது காரணங்களை வழங்க காவல்துறை தவறியதன் அடிப்படையில் ரகுவன்ஷியின் ஜாமீனை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது.

அந்தப் பிழை முற்றிலும் ஒரு அலுவலக ரீதியான தட்டச்சுப் பிழை மட்டுமே என்று சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். இது தீவிரமான வழக்கு கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் இதில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்ட சமயத்திலேயே அதற்கான காரணங்கள் வழங்கப்பட்டதற்கான பதிவு உள்ளது என்று அவர் கூறினார்.

இருப்பினும், கைது செய்யப்படும்போது அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டியதன் அவசியம் குறித்த முரண்பட்ட தீர்ப்புகளை நீதிமன்றம் சீரமைக்க வேண்டும் என்று அந்த அமர்வு கூறியது.

நாங்கள் இந்த விஷயத்தை விரிவாகப் பரிசீலிப்போம். இதை விரிவான அமர்வுக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்வோம் என்று நீதிபதி மிஸ்ரா கூறினார்.

குற்றத்தின் தீவிரத் தன்மைக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமே தவிர, தொழில்நுட்ப ரீதியான தட்டச்சுப் பிழைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.

இது, அவர்கள் இருவரும் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றிருந்தபோது நடந்த ஒரு சம்பவம். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. இது மிகவும் தீவிரமான குற்றமாகும் என்று மேத்தா கூறினார்.

பின்னணி என்ன?

கடந்த ஆண்டு மே 23 அன்று மேகாலயாவின் சோஹ்ரா பகுதியில் சுற்றுலா சென்றிருந்தபோது அந்தத் தம்பதியினர் காணாமல் போயினர். அதன்பின்னர், ஜூன் 2 அன்று ராஜா ரகுவன்ஷியின் உடல் பள்ளத்தாக்கு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. பண ஆதாயத்திற்காக கூலிப்படையினர் மூலம் தனது கணவரைத் தீர்த்துக்கட்ட சோனம் ரகுவன்ஷி சதி செய்ததாக காவல்துறை குற்றம் சாட்டியதையடுத்து, சோனம் ரகுவன்ஷி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

SC mulls larger bench reference in Meghalaya honeymoon murder case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.