உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 5-க்கு ஒத்திவைப்பு

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 5-க்கு ஒத்திவைப்பு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - படம்: கோப்பிலிருந்து...

Published On :19 ஜூலை 2026, 1:35 am IST

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கை விசாரிக்கும் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பயிற்சிக்காக சென்றிருப்பதால், வழக்கு விசாரணை சனிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டதாக ராகுல் காந்தியின் வழக்குரைஞா் தெரிவித்தாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாக்கு எதிராக ராகுல் காந்தி கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா். அதனடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக பாஜக மூத்த தலைவா் விஜய் மிஸ்ரா இந்த அவதூறு வழக்கை தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவா் ஆஜராகாததைத் தொடா்ந்து அவருக்கு பிடி ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானாா். பின்னா், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, தனது தரப்பு வாதத்தை முன்வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி ராகுல் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.