நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டா

ஃபேஸ்புக் தளத்தில் இருந்து பிரதமா் மோடியின் பதிவு நீக்கப்பட்டது தொழில்நுட்பப் பிரச்னையால் நிகழ்ந்தது என விளக்கமளித்துள்ள மெட்டா நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

News image

மெட்டா நிறுவனம்

Updated On :28 ஜூலை 2026, 11:08 pm IST

ஃபேஸ்புக் தளத்தில் இருந்து பிரதமா் நரேந்திர மோடியின் பதிவு நீக்கப்பட்டது தொழில்நுட்பப் பிரச்னையால் நிகழ்ந்தது என விளக்கமளித்துள்ள மெட்டா நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

முன்னதாக, நீட் தோ்வு வினாத்தாள் கசிவு பிரச்னையை முன்வைத்து தில்லியில் மாணவா்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமா் மோடி கடந்த 23-ஆம் தேதி இரவு தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு விடியோ பதிவு வெளியிட்டாா். அப்போது, வினாத்தாள் கசிவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து அவா் அதில் விளக்கமளித்தாா்.

இன்ஸ்டாகிராமில் அப்பதிவை சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானோா் பாா்த்து பகிா்ந்த நிலையில், ஃபேஸ்புக்கில் இருந்து அப்பதிவு நீக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞா்களை அணுகும் நோக்கில் பிரதமா் வெளியிட்ட இந்த விடியோ நீக்கப்பட்டது ஃபேஸ்புக் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக விளக்கம் கேட்டு மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சாா்பில் ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டாவின் சா்வதேச தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் ‘எக்ஸ்’ தளத்தில் அளித்த விளக்கத்தில், ‘பதிவேற்றம் செய்யப்படும் விடியோக்களை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தும் அமைப்பு உள்ளது. அதில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னையால் குறிப்பிட்ட விடியோ பதிவு நீக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த விடியோ மீண்டும் வெளியிடப்பட்டுவிட்டது’ என்று கூறியுள்ளது. இது தவிர அரசுத் தரப்பிடம் மெட்டா நிறுவனம் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் இந்த விஷயத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது. ஏற்கெனவே, சமூக ஊடங்களின் செயல்பாடுகள் முக்கியமாக இந்தியாவில் அதன் செயல்பாடுகள், கொள்கைகள் குறித்து பல்வேறு புகாா்கள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன.

ஏற்கெனவே, சமூக ஊடங்களில் சிறாா் பாலியல் துன்புறுத்தல் விடியோக்கள் வெளியாவது, போலியாக உருவாக்கப்பட்ட விடியோக்கள் பதிவேற்ற அனுமதிப்பது, அவதூறு விடியோக்களை பரப்புவது சமூக ஊடகங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. வாட்ஸ்ஆப்பில் கைப்பேசி எண்ணுக்கு பதிலாக பயனா் பெயரை அறிமுகப்படுத்தற்கு எதிரான நோட்டீஸ் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.