பிரதமர் நிவாரண நிதி குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மக்கள் பணம் எங்கே பிரதமர் மோடி அவர்களே?
பொதுமக்களின் வியர்வைச் சிந்திய பணமும், அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்பும் இணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதமர் நிவாரண நிதி (PM Cares).
2022 - 23 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ. 909.64 கோடி நன்கொடை உள்பட ரூ. 6,723.07 கோடி வரவு வந்த நிலையில், அதில் வெறும் ரூ. 439.38 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, மீதம் ரூ. 6,283.68 கோடி கையிருப்பில் உள்ளது.
2022 - 23க்கு பின் அறிக்கை வெளியிடப்படாதது ஏன்? அமைச்சர்கள் இருக்கும் அமைப்பிற்கு தகவல் அறியும் உரிமை பொருந்தாது எனக் கூறித் தப்பிப்பது ஏன்?
இதன் அறங்காவலர்களாக மத்திய அமைச்சர்கள் பொறுப்பில் இருக்கும்போது, சட்டப்படி பொது ஊழியர்களான அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்.
எனவே,பிரதமர் நிவாரண நிதி நிச்சயம் தகவல் அறியும் உரிமை வரம்புக்குள்தான் வருகிறது. மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
Manickam Tagore MP urges the Central Government to release a audit statements of PM Cares Fund
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராகுல் பேச அனுமதி மறுப்பு! ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும்: மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகள் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்
இதுவரை 152 தோ்வுத் தாள் கசிவு: ப. மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




