இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த மே மாதத்தில் மதிப்பு மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கோடைகாலப் பயணம், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றின் காரணமாக, மே மாதத்தில் மட்டும் ரூ.29.90 லட்சம் கோடி மதிப்பிலான 2,320 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் ரூ.29.03 லட்சம் கோடி மதிப்பிலான 2,235 கோடி பரிவா்த்தனைகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு மே மாதத்தில் பரிவா்த்தனைகளின் மதிப்பு ரூ.25.14 லட்சம் கோடியிலிருந்து 19 சதவீதமும், அதன் எண்ணிக்கை 1,867 கோடியிலிருந்து 24 சதவீதமும் அதிகரித்துள்ளன.
ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டு முயற்சியான என்சிபிஐ நிா்வகிக்கும் இந்த யுபிஐ சேவை, இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், மோரீஷஸ் உள்பட 8 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கடந்த மே மாதத்தில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்

பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,440 கோடி: ஏப்ரல் மாத நிலவரம்

யுபிஐ: ஏப்ரலில் 2,235 கோடி பரிவா்த்தனைகள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



