தேர்தல் பிரசார நிலையிலிருந்து முதல்வர் விஜய் வெளியே வர வேண்டும்! தமிழிசை திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்; தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோபாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் பலி!

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றி..

News image

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது - dns

Updated On :2 ஜூன் 2026, 3:34 pm IST

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் மண் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஷாங்லா மாவட்டத்தின் கீழ் அல்பூரி பகுதியில் உள்ள ரஹீமாபாத் பகுதியில், திங்கள்கிழமை வீட்டின் ஒரு அறையில் உள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் ஏழு குழந்தைகள் சிக்கினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளை அகற்றி, சிக்கியிருந்த ஏழு குழந்தைகளையும் மீட்டனர். அதில் ஆறு குழந்தைகள் பலத்த காயங்களுடன் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டடார்.

கடந்த மாதம், சார்சத்தா மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்கு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததுடன், தம்பதியினர் பலத்த காயமடைந்தனர்.

Summary

At least six children were killed and one was injured when the roof of a mud house collapsed in Pakistan's Khyber Pakhtunkhwa district, officials said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.