எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

எடியூரப்பாவுடன் டி.கே. சிவக்குமார் சந்திப்பு!

எடியூரப்பா - டி.கே. சிவக்குமார் சந்திப்பு பற்றி...

News image

எடியூரப்பாவுடன் டி.கே. சிவக்குமார் சந்திப்பு - X

Updated On :3 ஜூன் 2026, 3:14 pm IST

கர்நாடக முதல்வராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

2023-ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெற்றது. தொடர்ந்து, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவகுமாரும் முதல்வராக பதவி வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகாலம் முதல்வராக பதவி வகித்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிட உத்தரவின்பேரில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் மே 30-ஆம் தேதி காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுவின் புதிய தலைவராக டி.கே.சிவகுமாா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன்பிறகு ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்த டி.கே.சிவகுமாா், ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். தொடர்ந்து ஆளுநரும் அழைப்பு விடுத்தார்.

பெங்களூரு, மக்கள் மாளிகையில் இன்று மாலை 4.05 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், கா்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமாா் பதவியேற்க உள்ளாா். அவருடன் துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், பி.எஸ். எடியூரப்பாவின் வீட்டுக்கு நேரில் சென்ற டி.கே. சிவக்குமார் அவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Summary

Karnataka - D.K. Shivakumar Meets BS Yediyurappa!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.