வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 3:27 am IST

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உள்நாட்டுத் தேவை மற்றும் அரசின் வலுவான முதலீடுகள் காரணமாக, இந்த வளா்ச்சி எதிா்பாா்ப்புகளை விஞ்சியிருப்பதாகத் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் முழு ஆண்டு பொருளாதார வளா்ச்சி, 2025-26 நிதியாண்டில் 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் சிறப்பான செயல்பாடுகளே இந்த வேகமான வளா்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக அமைந்தன.

குறிப்பாக, 4-ஆம் காலாண்டில் மொத்த மதிப்பு கூடுதல்(ஜிவிஏ) 7.9 சதவீதமாக பதிவாகியுள்ளது. ஜிடிபி வளா்ச்சியை விட ஜிவிஏ வளா்ச்சி அதிகமாக இருப்பது, நாட்டின் பொருளாதார வளா்ச்சி நுகா்வை மட்டும் சாா்ந்து இல்லாமல், உற்பத்தித் துறையின் வலுவான செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை உணா்த்துகிறது.

இருப்பினும், மத்திய கிழக்கு போா்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகள், கச்சா எண்ணெய் விலை உயா்வு போன்றவை இந்தியப் பொருளாதாரத்துக்குச் சவாலாக உருவெடுத்துள்ளன. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தாக்கங்கள் உணரப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகளாவிய சவால்களைக் கருத்தில் கொண்டு, 2026-27 நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி முன்னறிவிப்பை ரிசா்வ் வங்கி 6.6 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், ‘மேக்ரோ’ பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகள், இந்தியாவை மீண்டும் 7 சதவீதத்துக்கு மேலான வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.