காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தெலங்கானா: அரசு மருத்துவமனைகளில் சர்வதேச மருத்துவ சேவை - உயர்நிலை ஆய்வுக் குழு அமைப்பு

தெலங்கானா: அரசு மருத்துவமனைகளில் உலகத் தரத்திலான மருத்துவ சேவை - உயர்நிலை ஆய்வுக் குழு அமைத்து உத்தரவு

Telangana CM for completing new building of Osmania Hospital in two years

கோப்புப்படம்

Published On :

தெலங்கானா: அரசு மருத்துவமனைகளில் உலகத் தரத்திலான மருத்துவ சேவை வழங்குவது பற்றி ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

இது குறித்து, தெலங்கானா மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. தாமோதர் ராஜநரசிம்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் : “தரமான மற்றும் குறைந்த செலவின சுகாதார சேவைக்கான ஓர் உலகளாவிய முனையமாக தெலங்கானா முன்னோக்கிச் செல்ல ஆயத்தமாகி வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் சர்வதேச மருத்துவச் சுற்றுலாவை முன்னிலைப்படுத்த மாநில அரசு ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இதன்மூலம், உலகத் தரத்திலான நோயாளிகள் சேவையும் உலகளாவிய தொடர்பும் மருத்துவத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதிநவீன உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகள் தொடங்கி சிறப்பு கவனம் தேவைப்படும் மருத்துவச் சேவை வரை, தெலங்கானாவின் பொது சுகாதார நிறுவனங்கள் புதிய நிலைகளை எட்டுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சை வழங்குவதை இந்தத் திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

Summary

Telangana State Government has constituted a high-level committee to promote International Medical Tourism in Government Hospitals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.