எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

பாங்காக்கிலிருந்து பெங்களூரு வந்த பயணியிடம் ரூ. 3.57 கோடி கஞ்சா பறிமுதல்!

பாங்காக்கில் இருந்து வந்த பயணி ரூ. 3.57 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

பெங்களூரு விமான நிலையம்.

Updated On :8 ஜூன் 2026, 11:49 am IST

பாங்காக்கில் இருந்து வந்த பயணி ரூ. 3.57 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 5-ஆம் தேதி பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் மறைத்து எடுத்துவந்த ரூ. 3.57 கோடி மதிப்பிலான 10.20 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த நபரையும் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில், ஜூன் 4-ஆம் தேதி பாங்காக்கில் இருந்து வந்த ஒரு பயணி, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2-இல் ரூ. 2.33 கோடி மதிப்பிலான 6.66 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் பிடிபட்டார். தொடர்ந்து கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு வழக்குகளிலும், அடையாளம் வெளியிடப்படாத குற்றவாளிகள், போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது வெளிநாடுகளில் குறிப்பிட்ட வெப்பநிலையில் வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் கஞ்சா செடி என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A passenger who arrived from Bangkok at Kempegowda International airport here was arrested with hydroponic ganja, valued at Rs 3.57 crore, officials said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.