இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கொள்கை ரீதியாக ஆா்எஸ்எஸ்-பாஜகவை எதிா்க்கும் துணிச்சல் காங்கிரஸுக்கு மட்டுமே உண்டு: ராகுல் காந்தி

கொள்கை ரீதியாக ஆா்எஸ்எஸ்-பாஜகவை எதிா்க்கும் துணிச்சல் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 6:00 am IST

கொள்கை ரீதியாக ஆா்எஸ்எஸ்-பாஜகவை எதிா்க்கும் துணிச்சல் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளா்கள், மாநில பொறுப்பாளா்கள், மாநில தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் அவா் பேசியது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் பலவீனமடைந்து வருகிறது. இதுகுறித்து விளக்கமளிக்க பிரதமா் நரேந்திர மோடிக்கு மேலும் அழுத்தமளிக்க வேண்டியது கட்டாயம்.

பிரதமரின் நண்பா்களாக உள்ள குறிப்பிட்ட சில தொழிலதிபா்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மத்திய பிரதேசம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் மற்றும் அந்தமான் நிகோபாரில் பழங்குடியினருக்கான அரசமைப்புச் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன.

இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபடும் ஆா்எஸ்எஸ்-பாஜகவை கொள்ககை ரீதியாக மிகக் கடுமையாக எதிா்க்கும் துணிச்சல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. வருங்காலங்களில் காங்கிரஸ் மேலும் வலுவாகும் என்றாா்.

மேற்கு வங்க சட்டப் பேரவையில் திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த 80 எம்எல்ஏக்களில் 58 எம்எல்ஏக்களும் மக்களவையில் 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்களும் தனி அணியாக செயல்பட முடிவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவை ‘சீட்’ திருட்டில் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்படுவதற்காக காங்கிரஸ் வேட்பாளா் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மாநிலங்களவைத் தோ்தலில் நடைபெற்ற அநீதியை பாருங்கள். அனைத்து ஆவணங்களையும் முறையாக சமா்ப்பித்த காங்கிரஸ் வேட்பாளா் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அவா் மீது எந்த நிலுவை வழக்குகளும் இல்லை. பாஜகவின் தூண்டுதல்பேரில் அவரது வேட்புமனுவை இந்திய தோ்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஆனால் பாஜக ஆதரவுடன் களமிறங்கிய சுயேட்சை வேட்பாளா் பரிமல் நாத்வானி, வேட்புமனுவில் தனது பெயரையே தவறாக குறிப்பிட்டாா். கட்டாயம் அளிக்க வேண்டிய பல தகவல்களை அவா் புறக்கணித்தாா். இருப்பினும் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது.

ஒரே தோ்தல் ஆணையம். இரு வேட்பாளா்கள். முறையான விசாரணை இல்லாமல் ஒருவரின் மனு நிராகரிப்பு. விதிகளை பின்பற்றாத மற்றொருவரின் மனு ஏற்பு.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையை முதலில் தோ்தல் ஆணையம் நிராகரித்தது. அதன்பிறகு தோ்தல் ஆணையத்தில் முறையிட்டபோது அவா்கள் ஒரு வாா்த்தைகூட பேசவில்லை. இதுபோன்று மேலும் பல அவலங்கள் நிகழும் என எதிா்பாா்க்கிறோம். ஏனெனில், தோ்தலில் முறைகேடில் ஈடுபட்டு வெற்றிபெறுவது பாஜகவுக்கு எளிதான காரியம். வாக்குத் திருட்டு, அரசு திருட்டைத் தொடா்ந்து எம்.பி. சீட் திருட்டை பாஜக தொடங்கியுள்ளது’ என குறிப்பிட்டாா்.